கேள்விக்குறியாகும் மாணவர் ஒழுக்கம்
தமிழகத்தின் பல்வேறு பள்ளி வளாகங்களில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய சவால்களாக மாறியுள்ளன.
அண்மையில் கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் பல மாணவர்களால் தாக்கிக் கொல்லப்பட்டது சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவ்வாறான வன்முறைச் செயல்கள், இணையதள தவறான பயன்பாடுகள், ஆசிரியர்களுக்கான மதிப்புக் குறைதல், போதைப்பொருள் பயன்பாட்டுச் சிக்கல்கள், பாலியல் தொந்தரவுகள் போன்ற நிகழ்வுகள் நமக்கு அதிக மனவேதனையை அளிக்கின்றன.


