பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சியா? - மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை,பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ள
பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
காடுகளையும், மலைகளையும் தங்களது வாழ்விடமாகவும், வாழ்வாதாரமாகவும் பல தலைமுறைகளாகப் பாதுகாத்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது.
வன நிலங்களை வனச்சாரா பயன்பாடுகளுக்கு மாற்றும்போது, அப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் கருத்தையும், கிராம சபையின் உரிமையையும் புறக்கணிக்கலாம் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு, பழங்குடியின மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும், வன உரிமைச் சட்டமும் வழங்கியுள்ள பாதுகாப்புகளுக்கு எதிரானதாகும்.


