செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது - சென்னை ஐகோர்ட்டு
சென்னை,இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எ
இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயன் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், ‘வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு அனுப்பிய விளக்கம் கடிதம் ஜூலை 28-ம்தேதி கிடைக்கப் பெற்றது. அதன்மீது பரிசீலனை நடந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.




