நாகையில் இருந்து கைநழுவுகிறது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ரூ.33,000 கோடி முதலீட்டிற்கு ஆபத்து
சென்னை: நாகை மாவட்டத்தில் சி.பி.சி.எல்., நிறுவனம், 33,000 கோடி ரூபாய் முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ள நிலையில், அதே திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டி ல் ஆந்திராவில் செயல்படுத்துகிறது. இதனால், நாகையில் சுத்திகரிப்பு நிலைய திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணலியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சி.பி.சி.எல்., எனப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு ஆண்டுக்கு, 1.05 கோடி டன் உற்பத்தித்திறன் உடைய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகம் உள்ளது.
அங்கு உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல் உள்ளிட்டவை தமிழகம் உட்பட தென் மாநிலங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்கிறது.



