சிறு, குறு நிறுவனங்கள் பாதிப்பு அரசுக்கு அ.தி.மு.க. கோரிக்கை
கோவை: கோவை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற குழு தலைவர் பிரபாகரன், முதல்வர் விஜய்க்கு அனுப்பிய கடிதம்:
கணபதி, ரத்தினபுரி, கண்ணப்ப நகர், நல்லாம்பாளையம், மணியகாரம்பாளையம், ஆவராம்பாளையம், பீளமேடு, சரவணம்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் மோட்டார், பம்ப் உற்பத்தி நிறுவனங்கள், பவுண்டரி, காஸ்டிக், வார்ப்பட பட்டறைகள், மோல்டிங் வேலைகள் என 15 ஆயிரம் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்து வந்தாலும், ஆவணங்களில் குடியிருப்பு பகுதிகளாக உள்ளன. சிலரது சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக ஆட்சேபம் தெரிவிப்பதால், தொழிலை அபிவிருத்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

