விவசாயி வீட்டில் பசுமாடு திருடிய வாலிபர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்
தேனி,கண்டமனூர் அருகே விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பசுமாட்டை திருடி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தி
கண்டமனூர் அருகே விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பசுமாட்டை திருடி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஜி.இராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சதாராம் (வயது 43). இவர் எரதிமக்காள் பட்டி செல்லும் சாலையில், பாலாஜி பள்ளிக்கு எதிரே தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அங்கு கொட்டகை அமைத்து பசுமாடுகளையும் வளர்த்து வருகிறார்.
கடந்த 9-ஆம் தேதி மாலை மாடுகளில் பால் கறந்துவிட்டு, இரண்டு மாடுகளை கொட்டகையில் கட்டிப்போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, அதில் சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பசுமாடு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

