ஊருக்குள் தொடர்ந்து 4 நாட்களாக இரவில் நிர்வாணமாக வலம் வந்த கணவன், மனைவி; காரணம் கேட்டு அதிர்ந்த கிராம மக்கள்
திருப்பத்தூர்,திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி நிர்வாணமாக ஊருக்குள் வலம் வந்த ச
திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி நிர்வாணமாக ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், கரம்பூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 56). இவருடைய மனைவி (தீபா 48). இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென தங்களுக்குள் சாமி வந்துவிட்டதாக கூறிக்கொண்டு, கணவன்-மனைவி இருவருமே ஆடைகளின்றி நிர்வாண நிலைக்கு மாறியுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அலறியடித்து வீட்டிற்குள் ஓடினர். விபரீதத்தை உணர்ந்து பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, "எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்" என கணவன்-மனைவி இருவரும் ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர்.

