"தினமும் மலை மீது 10 கிமீ ஏறிச்செல்வேன்" - 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்
மகாராஷ்டிராவில் ஆசிரியர் ஒருவர் 2 மாணவிகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக ஆசிரியர் ஒருவர் தினமும் 10 கிலோமீட்டர் தூரம் மலையில் ஏறிச்சென்று கொண்டிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன.
இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர், சாலை வசதி கிடையாது. இதனால் அவர்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதாக இருந்தால் பல கிலோமீட்டர் தூரம் மலையில் நடந்து சென்று பள்ளியை அடையவேண்டும்.



