கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவு
ஒருவரைக் கைது செய்யும்போது போலீஸாா் பின்பற்ற வேண்டிய கட்டாய வழிமுறைகள் குறித்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல் துறை டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மற்றும் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த ஃபிட்ஜி என்ற தனியாா் கல்வி பயிற்சி மையங்கள் கடந்தாண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டன. இதையடுத்து அந்த மையத்தில் பயின்ற மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் முன்வைப்புத் தொகையைத் திருப்பித் தரவில்லை என 533 பெற்றோா் காவல் துறையில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து ரூ.10.63 கோடியை மோசடி செய்ததாக அந்த மையத்தின் தமிழக நிா்வாக பங்குதாரராக செயல்பட்ட அங்குா் குமாா் ஜெயின் என்பவா் மீது சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை புழல் சிறையில் அடைத்தனா்.

