கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
நெய்வேலி: கோவிலில் உண்டியலை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி தெர்மல் சப் இன்ஸ்பெக்டர் ஜெரினா மற்றும் போலீசார நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, வட்டம் 21ல் நாக கன்னியம்மன் கோவில் அருகே பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், அவர் வட்டம் 30யை சேர்ந்த சிவா மகன் அம்மன்ராஜ்,26; என்பதும், இவர் கடந்த 8 ம் தேதி வட்டம் 27ல் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து ரூ.35 ஆயிரத்தை திருடிது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அம்மன்ராஜை கைது செய்தனர்.

