மகளிடம் அத்துமீற முயன்றதை தட்டி கேட்ட தாய்: கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவன்
திருப்பூர்,மகளிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட தாயை, கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் கணவரின் மகள்திருப்பூர்
மகளிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட தாயை, கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அவிநாசி ரோடு, பாண்டியன் நகர் வீரமாருதி தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி (40 வயது). இவர் மகளிர் சுயஉதவிக் குழுவில் வேலை செய்து வந்தார். இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். முதல் கணவர் மூலம் 19 வயது மகள் உள்ளார். விசாலாட்சி சமையல் வேலை செய்து தனது மகளை படிக்க வைத்தார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சமையல் வேலைக்குச் சென்றபோது, விழுப்புரம் மாவட்டம் அதனூரைச் சேர்ந்த விஜயபாலன் (42 வயது) என்பவருடன் விசாலாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரவணகுமார் (15 வயது), ஹரிஹர சிவா (11 வயது) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.



