ஆம் ஆத்மி என்னுடைய முன்னாள் காதலி: பா.ஜ.க. எம்.பி. ராகவ் சத்தா பேட்டி
சண்டிகார்ஆம் ஆத்மி கட்சி என்னுடைய முன்னாள் காதலி போன்றது என பா.ஜ.க. எம்.பி. ராகவ் சத்தா பேட்டியில் கூறினார்.பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம்
ஆம் ஆத்மி கட்சி என்னுடைய முன்னாள் காதலி போன்றது என பா.ஜ.க. எம்.பி. ராகவ் சத்தா பேட்டியில் கூறினார்.
பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அக்கட்சியில் இருந்து செயல்பட்டு, பின்னர் விலகி பா.ஜ.க.வில் இணைந்த எம்.பி. ராகவ் சத்தா பஞ்சாப்பின் சண்டிகார் நகரில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.
அப்போது அவர் அளித்த பேட்டியின்போது, பஞ்சாப்பில் போதைப்பொருள் தொடர்பான சூழல் எப்படி உள்ளது? என்றால், ரேசன் கடைகளில் மக்கள் வரிசையில் நிற்பது போன்று உள்ளது. மாநிலம் முழுவதும் வீடு தேடிச்சென்று போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

