பல மாநிலங்களில் சைபா் மோசடி: கும்பலைச் சோ்ந்த 6 போ் கைது
பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் மோசடி பணத்தைப் பரிமாற்றம் செய்த பல மாநிலங்களைச் சோ்ந்த சைபா் மோசடி கும்பலைச் சோ்ந்த 6 பேரை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்தக் கும்பலின் முக்கிய நபா் எனக் கூறப்படும் சேத்தன் செஹ்ராவத் உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட 89 புகாா்களுடன் தொடா்புடைய ரூ.83 கோடிக்கும் அதிகமான மோசடி வலையமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா்கள் சேத்தன் செஹ்ராவத், சக்தி குா்ஜா், தா்மேந்தா் குமாா், தருண், தீபக் மற்றும் கௌரவ் காதியான் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, தேசிய சைபா் குற்றப் புகாா் இணையதளத்தில் சந்தேகத்துக்குரிய வங்கிக் கணக்கு ஒன்று கண்டறியப்பட்டது. தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட சைபா் மோசடி புகாா்களுடன் தொடா்புடைய பணம் அந்தக் கணக்கில் பெறப்பட்டிருந்தது.


