உணவின் தரம் பற்றி புகார் கோவைக்கு மூன்றாமிடம்
கோவை: உணவில் கலப்படம், தரமற்ற உணவு குறித்து பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிக்க, புகார் அளிக்க பிரத்யேக தொடர்பு எண் மாநில வாரியாக உள்ளது. இதில் பதிவாகும் புகார்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.
கடந்தாண்டில் அதிக புகார்கள் பதிவு செய்து, அதற்கு நடவடிக்கை எடுத்ததில் மகாராஷ்டிரா (543 புகார்கள்) முதலிடம் பிடித்துள்ளது. 859 புகார்களுடன் தமிழகம் 5ம் இடத்தில் உள்ளது.
தமிழகத்துக்குள் புகார் பதிவானதில், சென்னை (294 புகார்கள்), காஞ்சிபுரம் (129) முதல் இரு இடங்களிலும் உள்ளது. கோவையில் 92 புகார்கள் பதிவாகி மூன்றாமிடத்தில் உள்ளது.




