தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்; தேர்தல் ஆணையம்
சென்னை,தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்ட
தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையை பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் ,தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.
தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்த தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 35. மதுராந்தகம் (தனி) மற்றும் 101. தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கை 09.09.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


