பஸ் ஸ்டாண்டில் கால அட்டவணை அவசியம்
பள்ளிப்பாளையம்; பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நாமக்கல், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, குமாரபாளையம் மற்றும் பல பகுதிக-ளுக்கு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பஸ் வரும். அதேபோல் கிராமப்புற பகுதிக்கும் பஸ்கள் வரும். ஆனால், இவை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வந்து செல்லும். குறிப்பாக, பள்ளிப்பா-ளையத்தில் இருந்து, கொக்கராயன்பேட்டை, சேந்தமங்கலம், ஓமலுார், வேலுார், சோழசிரா-மணி, மேட்டூர், இறையமங்கலம் மற்றும் பல பகுதிகளுக்கு ஒரு சில பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் வரும்.
இந்த பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், பஸ் எப்போது வரும், எந்த நேரத்திற்கு வரும், ஒரு வேளை பஸ் போய் விட்டதா என, தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி பஸ் ஸ்டாண்டில் கால அட்டவணை அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


