Donald Trump நடாலி ஹார்ப்பை முத்தமிட்டாரா? - வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி!
புகைப்படத்தில் இருக்கும் கொடியிலும் கோல்ஃப் கிளப்பின் அடையாளம் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“ட்ரம்ப், நடாலி ஹார்ப்பை முத்தமிடுகிறார்...” – இந்தப் புகைப்படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் Donald Trump, அவருடைய Executive Assistant நடாலி ஹார்ப்பை கோல்ஃப் மைதானத்தில் முத்தமிடுவதுபோல இந்தப் புகைப்படம் உள்ளது. இதைப் பார்த்த சிலர், இருவருக்கும் இடையே காதல் உறவு இருப்பதாகப் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், இந்தப் புகைப்படம் உண்மையானதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுவரை கிடைத்த தகவல்படி, இந்தப் புகைப்படம் உண்மையானது என்று உறுதி செய்யும் நம்பகமான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், புகைப்படத்தில் இருக்கும் சில விஷயங்கள் இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.


