ஆவணி அமாவாசை: ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி,ஆவணி மாத அமாவாசையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அபய ஆஞ்சநேயர்தர்மபுரி எஸ்.வி.ரோடு ஸ்ரீ அபய
ஆவணி மாத அமாவாசையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தர்மபுரி எஸ்.வி.ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சுவாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் தர்மபுரி மாவட்டம் அல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

