பேச்சு, பேட்டி, அறிக்கை
பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: தமிழக சட்டசபை, கிறிஸ்துவ திருச்சபை போல் நடப்பதாக விமர்சனங்கள்
தமிழக சட்டசபை, கிறிஸ்துவ திருச்சபை போல் நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அப்படி நடத்துவது தவறு என்பதை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, மதச்சார்பற்றது என சபாநாயகர் பிரபாகர் நினைத்தால், சட்டசபையில் முதலில் திருக்குறள் சொல்ல வேண்டும். தமிழகத்தில், ஹிந்துக்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். திருக்குறள், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், குர்ஆன் இவை அனைத்தையும் சொல்ல வேண்டும்.
இவை எல்லாத்தையும் படிச்சிட்டு, அப்புறம் தான் மக்கள் பிரச்னைகள் மீது விவாதம் நடத்தணும்னா, வருஷம் முழுக்க சட்டசபை கூட்டத்தை நடத்தணுமே!
தி.மு.க.,வின் தொழிற்சங்க அமைப்பான, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலர் சண்முகம் பேட்டி:




