மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசர் கோயில்... திருப்பதிபோல் களைகட்டும் புரட்டாசி உற்சவம்!
'இனி என் தரிசனத்துக்காகத் தவிக்க வேண்டாம். இங்கேயே ஓர் ஆலயத்தை எழுப்பு.அதில் நான் பிரசன்னமாகி அருள்பாலிப்பேன்' என்று சொல்லி மறைந்தார் பெருமாள். இதைக் கேட்ட மன்னன் உடனடியாக அங்கே ஒரு பெருமாள் கோயிலை நிர்மாணிக்க உத்தரவிட்டார்.
புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடுதான் பலரின் நினைவுக்கு வரும். அதிலும் திருப்பதியில் பெருமாளைத் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். ஆனால் இன்றைக்கு திருப்பதி செல்வது மிகவும் சவாலான ஒரு காரியமாக மாறியிருக்கிறது.
பயணத்துக்கும் தரிசனத்துக்கும் முன்பதிவு தேவை. அல்லது சில நாள்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் திருப்பதி சென்று தரிசனம் செய்த பலனையும் திருப்தியையும் அருளும் பெருமாள் சந்நிதி மதுரையில் உண்டு. அது, மதுரை தல்லாகுளத்தில் இருக்கும் ஆலயம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில்.



