பெண் போல் வேடமணிந்து வந்த மர்ம நபர் வீடு வீடாக சென்று திருட்டு
கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நள்ளிரவில் பெண் போல் வேடமணிந்து வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர் ஒருவராலும், அவனது கைவரிசை அடங்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நள்ளிரவில் பெண் போல் வேடமணிந்து வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர் ஒருவராலும், அவனது கைவரிசை அடங்கிய அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகளாலும் அந்த பகுதி மக்களிடையே பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இரணியல் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவன் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஏதோ ஒரு பெண் நடந்து வருவது போல தோன்றினாலும், அவனது உடல் அசைவுகள் மற்றும் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின.
பெண்கள் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டு, முகத்தை துணியால் மூடியபடி வரும் அந்த மர்ம ஆசாமி, ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை குறிவைத்து வீடு வீடாக சென்று பூட்டை உடைக்க முயல்வதும், கண்ணில் படும் பொருட்களை திருடி சென்றுள்ளார்.

