ஒசைரி நுால் விலை 5 ரூபாய் குறைந்தது
திருப்பூர்: வரத்து அதிகரித்து, பஞ்சு விலை குறைய வாய்ப்பு ள்ளதால், ஒசைரி நுால் விலை கிலோவுக்கு, 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன.
பருத்தி ஆ ண்டு (2025 அக்., - 2026 செப்.,) நிறைவடைய, 15 நாள் மட்டுமே உள்ள நிலையில், இருப்பு வைத்திருந்த பஞ்சு விற்பனைக்கு வருவது சற்று அதி கரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்கூட்டியே அறுவடை நடந்ததால், புதிய பஞ்சு வரத்தும் துவங்கி விட்டது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், தினசரி பஞ்சு வரத்து, 2,200 'பேல்'களாக (ஒரு பேல் 170 கிலோ) குறைந்திருந்தது; நேற்றைய நிலவரப்படி, 10 ஆயிரம் 'பேல்'களை தொட்டுவிட்டது.

