எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.300-க்கு விற்பனை
திருப்பூர்,திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பருவநிலை, நீர்வரத்து மற்றும் நீர்இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய, மத்திய, நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அத
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பருவநிலை, நீர்வரத்து மற்றும் நீர்இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய, மத்திய, நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் படி காய்கறிகள், கீரைகள், தென்னை, வாழை, கரும்பு, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இதில், ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையில் ஜூலை முதல் டிசம்பர் வரை அதிக மகசூல் கிடைக்கும்.
இதேபோல், ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். செடிவகை சமதள பரப்பிலும் கொடிவகை மலைப்பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த நாளில் இருந்து 3-ம் வருடம் அறுவடைக்கு தயாராகி விடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.



