'நாங்க என்ன முட்டாளா?' – தவெக எம்.எல்.ஏ-வைச் சுற்றி வளைத்த மக்கள்
'கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்?' என பொதுமக்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விகளை நேரடியாக எழுப்பத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி விவகாரத்தில், தவெக சட்டமன்ற உறுப்பினரை மக்கள் முற்றுகையிட்டுச் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்துள்ள வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. கரூரில் ஆய்வுக்காக சென்ற தவெக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவை, அப்பகுதி பொதுமக்களும் பெண்களும் திடீரெனச் சுற்றிலும் வளைத்து முற்றுகையிட்டனர்.
தேர்தலின் போது தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் கொடுத்த வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.முற்றுகையிட்ட பொதுமக்கள் எம்.எல்.ஏ-வை நோக்கி, "தேர்தல் பிரச்சாரத்தின் போது 'தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுக் கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்' என்றுதானே முதலமைச்சர் விஜய் சொன்னார்? ஆனால், இப்போது கூட்டுறவு வங்கிக்குச் சென்று கேட்டால், மே 2025-க்கு பிறகு வாங்கிய கடன்கள் மட்டும்தான் தள்ளுபடி என்று அங்குள்ள அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
