சேலம் வழியாக சென்ற 2 ரயில்களில் 7 கிலோ குட்கா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற 2 ரயில்களில் 7 கிலோ குட்காவை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற விவேக் விரைவு ரயிலில் காட்பாடி முதல் ஈரோடு வரை ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது, ஜோலாா்பேட்டை மற்றும் சேலம் ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில், கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த கைப்பையை போலீஸாா் சோதனை செய்தனா். அதில் சுமாா் 2 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், அதை சேலம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.



