குன்றத்துாரில் காவலருக்கு அஞ்சலி
குன்றத்துார்: ஸ்ரீபெரும்புதுாரில், 1991 மே 21ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த குன்றத்துார் காவல் நிலைய எஸ்.ஐ., எத்திராஜுலு உள்ளிட்ட ஒன்பது போலீசார் உடல் சிதறி பலியாகினர்.
உயிர்நீத்த காவலர் எத்திராஜுலுவை கவுரவிக்கும் வகையில், குன்றத்துார் காவல் நிலைய வளாகத்தில் நினைவு துாண் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவலர் தினமான நேற்று, நினைவு துாண் முன் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.
இதில், பல்லாவரம் உதவி கமிஷனர் கிரி, குன்றத்துார் இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.


