தனுஷின் ஒரே ஒரு பதிவு! வெடித்து கிளம்பிய பூகம்பம்? அரசியல் பயணத்தில் அடுத்த ஆட்டம்?
செய்தியாளர் - கார்த்திகேயன் நடிகர்கள் நாடாள முடியுமா என்ற கேள்வி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எப்போதும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி தான். ஆனால், இ
நடிகர்கள் நாடாள முடியுமா என்ற கேள்வி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எப்போதும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி தான். ஆனால், இந்த கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிதா, விஜய் ஆகியோர் தான். விஜயகாந்த் மட்டும், எதிர்கட்சி தலைவர் பதவி வரை உயர்ந்தார். மற்றபடி, சிவாஜி, சரத்குமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் கட்சியை ஆரம்பித்து, பாதியிலேயே கலைத்துவிட்டு அரசியலில் இருந்து காணாமல் போனார்கள். அவ்வளவு ஏன், தமிழகத்தின் மிகுந்த ஆளுமையான நபர் என்று கூறப்பட்ட கமல் கூட, இந்த ரேஸில் ஜெயிக்க முடியாமல், தோல்வியை தான் தழுவியிருக்கிறார்.
இப்படியான சூழ்நிலையில், நடிகர் தனுஷ் இந்த அரசியல் பயணத்தில் இணைய இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. தனுஷின் பிறந்தநாள் விழா மேடையில் அவர் பேசிய கருத்துக்கள், இந்த தகவல்களுக்கு கூடுதல் பலம் சேர்த்திருந்தது. இதையடுத்து, முதலமைச்சர் விஜய்-க்கு போட்டியாக இன்னொரு நடிகரா? தனுஷால் முதலமைச்சர் ஆக முடியுமா? போன்று பல்வேறு கருத்துக்களை, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கவனததை ஈர்த்துள்ளது. அதாவது, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளுக்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் தனுஷ்-ம் எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு, வாழ்த்துக்களை கூறியுள்ளார்.



