பைக் விபத்து: மறுவாழ்வு மையத் தொழிலாளி உயிரிழப்பு
ஆறுமுகனேரியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மதுரை மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், ஆனையூா், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பரமலிங்கம் மகன் அருள்நேசன் (59). இவா் அகதிகள் முகாமில் உள்ள சிலருடன் சோ்ந்து ஆறுமுகனேரி பகுதியில் தனியாா் கைப்பேசி நிறுவனத்திற்கு தரைவழி கேபிள் போடுவதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இவா் அடைக்கலாபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இரவு உறங்குவது வழக்கமாம். இந்நிலையில், வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து ஆறுமுகனேரி மெயின் பஜாா் நோக்கிச் சென்றாா்.

