காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் சொற்பொழிவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் பூபதி அறக்கட்டளைச் சொற்பொழிவு நடந்தது.
முனைவர் நெய்தல் நாடன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் இளங்கோவன் வரவேற்றார். நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ், அரசு பள்ளி, கல்லுாரிகளில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டி பேசினார்.
மயிலாடுதுறை ஏ.வி.சி., கல்லுாரியின் தமிழ்த்துறைத் தலைவர் தமிழ்வேலு, ‘பவணந்தியாரின் தொகைகள்’ எனும் தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றினார்.




