வசதிகளின்றி வாரச்சந்தை வியாபாரிகள் வருத்தம்
பெருமாநல்லுார், செப். 7– பெருமாநல்லுார் நால்ரோடு சந்திப்பு அருகே வாரச்சந்தை செயல்படுகிறது. சனிக்கிழமை
பெருமாநல்லுார் நால்ரோடு சந்திப்பு அருகே வாரச்சந்தை செயல்படுகிறது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் இச்சந்தைக்கு திருப்பூர், அவிநாசி, சேவூர், குன்னத்துார், நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து மளிகை, காய்கறி, பழங்கள், துணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர்.சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
கடை அமைக்க மேடை, மேற்கூரை, மின்விளக்கு, குடிநீர் வசதிகள் இல்லாததால், வியாபாரிகள் தரையில் துணி விரித்து பொருட்களை விற்கின்றனர். மழைக்காலத்தில் சேறும் சகதியுமாகவும், வெயில் காலத்தில் கடும் வெப்பத்தாலும் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மின்விளக்குக்கு வியாபாரிகளே பேட்டரி விளக்குகளை பயன்படுத்தும் நிலையும் உள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், ‘‘அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதுடன், ரோட்டோர கடைக்காரர்களிடமும் கட்டாய வசூல் செய்யப்படுகிறது; சந்தை கழிப்பறையிலும் சிறுநீர் கழிக்க 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது; ஒன்றிய நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’’ என்றனர்.


