மனைவி, மகள் மாயம் கணவர் புகார்
கம்பம், செப். 11 சுருளிப்பட்டி பரவு காவல் தெருவை சேர்ந்தவர் மணிக்குமார் 39, இவரது மனைவி சதுர்த்தியா 23,
கம்பம், செப்.
சுருளிப்பட்டி பரவு காவல் தெருவை சேர்ந்தவர் மணிக்குமார் 39, இவரது மனைவி சதுர்த்தியா 23, இவர்களுக்கு சுவஸ்திகா 2 என்ற மகள் உள்ளார். தம்பதியர் குடும்பத்துடன் கேரளா மேப்பாறை என்ற இடத்தில் தங்கி ஏலத்தோட்ட வேலை செய்தனர். ஏலத்தோட்ட வேலைக்கு செல்வது தொடர்பாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செப். 8 காலை தனது குழந்தையுடன் வீட்டை விட்டு சதுர்தியா வெளியேறியுள்ளார். மனைவி, மகளை காணாமல் மணிக்குமார் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அவரது உறவினர்சதுர்த்தியாவை குழந்தையுடன், கம்பம் காந்தி சிலை அருகில் பார்த்ததாக கூறியுள்ளார். கம்பத்தில் தேடியும் கிடைக்காததால் தெற்கு போலீரில் புகார் செய்தார். போலீசார விசாரிக்கின்றனர்.
