மும்பை: ரூ.5.47 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
மும்பைமும்பையில் ரூ.5.47 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.மராட்டியத்தின் மும்பை நகரில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தங்க
மும்பையில் ரூ.5.47 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மராட்டியத்தின் மும்பை நகரில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுகிறது என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, மும்பை மண்டல பிரிவை சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அப்போது, விமான நிலைய பணியாளர் ஒருவர் தங்கத்தூளை 3 கேப்சூல்களில் மறைத்து, மெழுகில் வைத்து கடத்திக்கொண்டு சென்றது தெரிய வந்தது. விமான நிலையத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவுக்கு அவரை பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள் அவரை பிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
