எனக்கு தண்ட சம்பளமா?
'பதவியில் இல்லை என்பதற்காக, எப்படியெல்லாம் அவமானப்படுத்துகின்றனர் பார்த்தீர்களா...?' என குமுறுகிறார், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்று, 1,000 நாட்கள் ஆன நிலையில், அதை பிரமாண்டமாக கொண்டாடினர்.
அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரான சந்திரசேகர ராவ், 'இந்த 1,000 நாட்களில், காங்கிரஸ் அரசு உருப்படியாக எதையுமே செய்யவில்லை...' என அறிக்கை வெளியிட்டார்.

