பக்தர்களின் வழிபாட்டு நம்பிக்கை உணர்வுகளைப் புண்படுத்திய தவெக அரசு! - வானதி சீனிவாசன் கண்டனம்
சென்னை,காவல்துறையினர் புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டன
காவல்துறையினர் புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழா, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கப்பட்ட புனித நிகழ்வாகும். ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவில், பக்தர்களின் உணர்வுகளையும் ஆன்மிக நம்பிக்கைகளையும் மதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்ற கேள்வி எழுகிறது.


