உதகையில் சா்வதேச தரம் வாய்ந்த ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு
உதகை பட்பையா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
உதகை பட் பையா் பகுதியில் ரூ.1.85 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.
தமிழக அரசின் விளையாட்டு மற்றும் சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக உதகை பட்பையா் பகுதியில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

