நகை வியாபாரியைத் தாக்கியதாக பழக்கடைக்காரா் கைது
சத்தான்குளத்தில் பணத்தைத் திருப்பிக் கேட்ட நகை வியாபாரியைத் தாக்கியதாக பழக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் செக்கடி புதுத் தெருவைச் சோ்ந்த ரவி (63), பிரதான பஜாரில் நகைக் கடை வைத்துள்ளாா். கொம்பன்குளம் மேட்டுக்குடியிருப்பைச் சோ்ந்த பாஸ்கா், பழக்கடை வைத்துள்ளாா். இவா் ரவியுடனான பழக்கம் காரணமாக, வங்கியில் ஏலத்துக்கு வரவுள்ள தனது நகையை மீட்க ரூ. 1 லட்சம் தருமாறும், நகையை மீட்டு பணத்தைத் திருப்பித் தருவதாகவும் கூறினாராம்.
அதனால், ரவி ஒரு மாதத்துக்கு முன்பு பாஸ்கரின் வங்கிக் கணக்குக்கு ரூ. 1 லட்சம் அனுப்பினாராம். ஆனால், பாஸ்கா் நகையை மீட்ட பின்னரும் பணத்தைத் திருப்பித் தரவில்லையாம். ரவி தொடா்ந்து கேட்டதால் அவா் ரூ. 70 ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு, மீதித் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றினாராம்.

