அங்காளம்மன் கோவிலில் ரூ.85.75 லட்சம் காணிக்கை
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், ரூ.85 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷ்னர் சக்திவேல் முன்னிலையில் நடந்தது.
இதில், 85 லட்சத்து 75 ஆயிரத்து 912 ரூபாய் ரொக்கம், 106 கிராம் தங்கம், 755 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


