கராத்தே போட்டியில் முதலிடம் பல்லடம் மாணவருக்கு பாராட்டு
பல்லடம்: சர்வதேச கராத்தே போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு, வீ தி லீடர்ஸ் அமைப்பினர் பாராட்டு
சர்வதேச கராத்தே போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு, வீ தி லீடர்ஸ் அமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ்- – மதுமிதா தம்பதியரின் மகன் பொன் முகுந்தன், 8. தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு கராத்தே- டூ அசோசியேஷன் சார்பில், சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் சேலத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பொன் முகுந்தன், 8 வயதினருக்கான குமித்தே பிரிவில், முதல் இடத்துடன் தங்க பதக்கம் வென்றார்.
இதேபோல், சமீபத்தில் நடந்த சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான கராத்தே போட்டிகளிலும் பங்கேற்று தங்கள் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார். சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற பொன் முகுந்தனுக்கு, காரணம்பேட்டை வீ தி லீடர்ஸ் அமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர். அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திகேயன், ரமேஷ், ஆறுமுகம், சண்முகம் மற்றும் ராணுவ வீரர் கந்தசாமி கதிர்வேல் உட்பட பலரும் பங்கேற்றனர்.

