உலக வில்வித்தை பாரா சீரிஸ்: இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்
உலக வில்வித்தை பாரா சீரிஸ் போட்டியில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை செவ்வாய்க்கிழமை வென்றது.
முன்னதாக இறுதிச்சுற்றில், காம்பவுண்ட் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவின் தோமன் குமாா், ஷியாம் சுந்தா் சுவாமி கூட்டணி 152-139 என்ற புள்ளிகள் கணக்கில், இராக்கின் அப்பாஸ் காதிம், அன்வா் அல்தாவூத் இணையை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.
ரீகா்வ் ஆடவா் அணிகள் பிரிவில், ஹா்விந்தா் சிங், விஜய் சண்டி ஜோடி 6-2 என, ஸ்லோவாகியாவின் டேவிட் இவான், டெனிஸ் இவான் கூட்டணியை வென்று சாம்பியன் ஆனது.

