த.வெ.க., பேனர் கிழிப்பு; நகராட்சி தலைவரின் அண்ணன் கைது
விருதுநகர், செப். 16 – விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ் கனி 44. இவர் த.வெ.க., 24வது வார்டு கிளை
விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ் கனி 44. இவர் த.வெ.க., 24வது வார்டு கிளை செயலாளராக உள்ளார். செப்.17ல் காமராஜர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்க விருதுநகருக்கு வரும் முதல்வர் விஜய் வரவேற்க பஜாரில் தெப்பம் அருகே நகராட்சி அனுமதி பெற்று பேனர் வைக்கப்பட்டது.
இந்த பேனரை தி.மு.க., நகர் செயற்குழு உறுப்பினரும், விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவனின் அண்ணனுமான ரமேஷ்குமார் 52, கிழித்தார். இதனை தட்டி கேட்ட மரிய பிரான்சிஸ் கனியை திட்டினார். ரமேஷ் குமாரை பஜார் போலீசார் கைது செய்தனர்.
