ஸ்பெயினை வென்றது மாலி: உலக கோப்பை கூடைப்பந்தில்
பெர்லின்: ஜெர்மனியில், பெண்கள் உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மாலி, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் மாலி அணி 82-73 (19-17, 13-17, 31-19, 19-20) என்ற புள்ளி கணக்கில் முதல் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஹங்கேரி அணி 71-67 என, நைஜீரியாவை வென்றது.
லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இப்ஸ்விச் டவுன், லிவர்பூல் அணிகள் மோதின. அலெக்சாண்டர் ஐசக் 2 கோல் (6, 9வது நிமிடம்) அடித்து கைகொடுக்க, லிவர்பூல் அணி 2-0 என முதல் வெற்றியை பதிவு செய்தது. 3 போட்டியில், ஒரு வெற்றி, 2 'டிரா' என, 5 புள்ளிகளுடன் லிவர்பூல் அணி 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி (6 புள்ளி) உள்ளது.
மாட்ரிட்: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ரியல் பெடிஸ், ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய ரியல் மாட்ரிட் அணி 0-1 என முதல் தோல்வியை பெற்றது. ரியல் பெடிஸ் அணிக்கு டிராய் பாரட் (81வது நிமிடம்) கைகொடுத்தார். 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வி என ரியல் மாட்ரிட் அணி 9 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பார்சிலோனா (9 புள்ளி) உள்ளது.



