மலேசிய உரிமை கட்சி தலைவர் பேராசிரியர் ராமசாமி சென்னை வருகை: வைகோவுடன் சந்திப்பு
சென்னை,மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், மலேசிய உரிமை கட்சியின் நிறுவன தலைவருமான பேராசிரியர் பி. ராமசாமி சென்னைக்கு வருகை தந்துள்ள
மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், மலேசிய உரிமை கட்சியின் நிறுவன தலைவருமான பேராசிரியர் பி. ராமசாமி சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை அண்ணா நகரிலுள்ள இல்லத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், மலேசிய உரிமை கட்சியின் நிறுவன தலைவருமான பேராசிரியர் ராமசாமி தங்கள் இணையருடன், இன்று எங்களது அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து, தலைவரையும் என்னையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். அவரை பட்டாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தேன்.
அப்போது, மலேசிய நாட்டின் அரசியல், பொருளாதாரம் குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் குறித்தும் பல்வேறு கோணங்களில் உரையாடினோம். அதன்பிறகு, எங்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.


