ஒரே இடத்தில் இரு இயக்கத்தினர் விநாயகர் சிலை வைக்க போட்டி
வடமதுரை: புத்துார் நாடக மேடையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய 2 ஹிந்து அமைப்புகள் போட்டியிடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடமதுரை ஒன்றியத்தில் புத்துாரில் நாடக மேடையில் நேற்று முன்தினம் இரவு ஹிந்து முன்னணி சார்பில் சிலை கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டது. இதே மேடையில் ஹிந்து மக்கள் கட்சியினரும் சிலை வைக்க விரும்புவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வுக்கு வடமதுரை போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான இரு அமைப்பு நிர்வாகிகளும் அதிக எண்ணிக்கையில் வடமதுரை போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்றிரவு குவிக்கப்பட்டு இருந்தனர்.