அமெரிக்க ஓபன்: 2022-க்கு பிறகு மீண்டும் இணைந்த வில்லியம்ஸ் சகோதரிகள்... 3 மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வி
நியூயார்க்,அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2022-க்கு பிறகு மீண்டும் இணைந்த செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி 3 மணி நேரம் போராடி தோல்வியடைந்தது. கடுமையா
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் இணை, மாயா ஜாயிண்ட் - ஹாவோ-சிங் சான் ஜோடியை எதிர்கொண்டது.
2022-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க ஓபனில் மீண்டும் இணைந்து விளையாடிய வில்லியம்ஸ் சகோதரிகள், தொடக்கம் முதலே கடுமையாக போராடினர்.

