கோத்தகிரியில் பரவலாக மழை: உயிலட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோத்தகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள உயிலட்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோத்தகிரியில் இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலையில் உயிலட்டி கிராமப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி நீரை நம்பி, இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன. இதனால் உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கும் நீர்வரத்து வெகுவாக குறைந்து, பாறைகளாக காட்சியளித்தது.

