உலகையே உலுக்கிய ‘Dust Lady’ புகைப்படம்! 9/11 தாக்குதலுக்குப் பின் 'அந்த' பெண்ணுக்கு நடந்தது என்ன?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 9/11 தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது. அந்தத் தாக்குதலை நினைவுபடுத்
25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 9/11 தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது. அந்தத் தாக்குதலை நினைவுபடுத்தும் பல புகைப்படங்களில், இன்றும் மனதை விட்டு நீங்காத ஒன்று ‘Dust Lady’ என அழைக்கப்படும் புகைப்படம். ஒரு புகைப்படத்துக்கு பின்னால் இவ்வளவு வலி நிறைந்த உண்மை கதை இருக்க முடியுமா? யார் இந்த ‘Dust Lady’? அவருக்கு என்ன நடந்தது ? விரிவாக பார்க்கலாம்.
2001-ல் உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தில் விமானம் மோதியபோது, தூசி மற்றும் இடிபாடுகளால் முழுவதும் மூடப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் தப்பியோடும் காட்சி தான் ‘Dust Lady’ புகைப்படம். ஒரு செய்தி நிறுவனத்துக்காக புகைப்படக் கலைஞர் ஸ்டான் ஹோண்டா அந்தப் புகைப்படத்தை எடுத்தார்.
மார்சி போர்டர்ஸ் என்பவர் தான் அந்தப் பெண். அப்போது அவருக்கு 28 வயது. Bank of America-வில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. விமானம் மோதியதும் கட்டடம் பயங்கரமாக குலுங்க தொடங்கியதாக கூறப்படுகிறது. அவரது முதலாளி அங்கேயே இருக்கச் சொன்னாலும், மார்சி படிக்கட்டுகள் வழியாக தப்பிச் சென்றார். அப்போது அருகிலிருந்த கட்டடத்துக்கு அவர் வந்தபோது ஹோண்டா அவரைப் புகைப்படம் எடுத்தார்.

