சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை
சேலம், :சேலத்தில், மாவட்ட சரக்கு போக்குவரத்தாளர் நலச்சங்கம் சார்பில், 25ம் ஆண்டு மற்றும் வெள்ளி விழா ஆண்டு மகாசபை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். செயலர் ராமநாதன், 2025 - 26 ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் கபிரேல், வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்தார். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ் பேசினார்.
தொடர்ந்து கருப்பூரில் விதிமுறைக்கு மாறாக இயங்கும் சுங்கச்சாவடியை உடனே அகற்ற, மத்திய அரசை வலியுறுத்தல்; சேலம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்பி, பணிகள் தாமதமின்றி நடக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்; எரிபொருள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் விலை உயர்வால், லாரி தொழில் பாதிப்பை தடுக்க, சரக்கு போக்குவரத்தாளர்கள், வாடகையை சற்று உயர்த்தி கேட்டு வாங்கி தொழில் செய்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க உதவித்தலைவர் மகேந்திரன், மாவட்ட லாரி உரிமையாளர் சங்க செயலர் குமார், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

