தமிழக அமைச்சர் மீதான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு
புதுச்சேரி: தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீது, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அவரது சகோதரர் மரிய குளோத், 45; அவரது மனைவி கெரோலின் 42; ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு, புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் குற்றப்பத்திரிகை பெற நேரில் ஆஜராக மரியவில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் கோர்ட்டில் ஆஜராகமால் தவிர்த்து வந்தார். இந்நிலையில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், வழக்கை ரத்து செய்ய கோரியும் மரிய வில்சன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


