நவ இந்தியாவில் 9 ஏக்கரில் பீனிக்ஸ் மால் பணி விறுவிறு
கோவை, செப்.18- கோவையில் ப்ரூக் பீல்ட்ஸ், பன் மால், புரோஸோன் மால், அல்வேல் மால், ப்ராட்வே மால் உள்ளிட்டவை உள்ளன.
கோவையில் ப்ரூக் பீல்ட்ஸ், பன் மால், புரோஸோன் மால், அல்வேல் மால், ப்ராட்வே மால் உள்ளிட்டவை உள்ளன. கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், தொழில்துறையில் முன்னேறுவதால் பல நிறுவனங்கள் கோவையில் மால்கள், ஸ்டார் ஓட்டல்கள் கட்ட ஆர்வம் காட்டுகிறார்கள்.
பீனிக்ஸ் நிறுவனத்துக்கு சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கட்டா, லக்னோ, புனே நகரங்களில் மால்கள் உள்ளன. அவிநாசி ரோடு நவ இந்தியாவில் பிரமாண்ட மால் கட்டப்படும் என 2024ம் ஆண்டு அந்நிறுவனம் அறிவித்தது. தற்போது கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பீனிக்ஸ் நிறுவனத்தினர் கூறுகையில், நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை முதன்மையானது. 9 ஏக்கர் பரப்பில் கோவையின் மிகப்பெரிய மாலாக அமையவுள்ளது. சென்னை பீனிக்ஸ் மாலுக்கு இணையான வசதிகள் செய்யப்படும். 300க்கும் மேற்பட்ட பிராண்ட்களின் கடைகள் இருக்கும். கூடுதலாக 5 ஸ்டார் ஓட்டல் அமைக்கப்படும். தற்போது கோவை மாவட்ட மால் எதிலும் 5 ஸ்டார் ஓட்டல் இல்லை. நாங்கள் கட்டும் ஓட்டலில் 500 அறைகளுக்கு மேல் இருக்கும். இதற்காக சர்வதேச ஓட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 2028ம் ஆண்டு திறக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.


