கிழக்கு தில்லி- கட்டட மேல்கூரையில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து விழுந்த 30 வயது இளைஞா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: காலை 5:20 மணியளவில், சாலையோரத்தில் ஆடைகள் ஏதுமின்றி ஒருவா் கிடப்பதாகவும், அவரது தலையில் ரத்தக் காயம் காணப்படுவதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காந்தி நகா் காவல் நிலையக் குழுவினா், குற்றப் புலனாய்வு மற்றும் தடயவியல் நிபுணா்கள் அடங்கிய குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.
